போராட்டகாரர்கள் மீது தாக்குதல் – இங்கிலாந்து அவதானம்

இலங்கையில் போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவது தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய, சகல தரப்பினரும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதர சிக்கலைகளை ஜனநாயக ரீதியில், சமாதானமாக, அமைதியாக சரியான அணுகுமுறைகளுடன் மேற்கொள்ள வேண்டுமென மேலும் ஆலோசனை வழங்கியுள்ளது.

இலங்கைக்கு பயணித்த போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு மனித உரிமைகள் தொடர்பில், தமது கவனத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வெளிப்படுத்தியுள்ளதாக தெற்காசிய நாடுகளுக்கான அமைச்சர் லோர்ட் அஹமட் கூறியுள்ளதாக, பிரித்தானிய பாரளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் உலக நாடுகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் விக்கி போர்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினை சந்தித்து கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற ரம்புக்கணை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சுயாதீனமான நேர்மையான விசாரணைகளை நடாத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டகாரர்கள் மீது தாக்குதல் - இங்கிலாந்து அவதானம்

Social Share

Leave a Reply