பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் என சில ஊடங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த செய்திகளில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக சிலக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை (09.05) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியினை இராஜினாமா செய்வாரென்ற ஊகங்கள் கடுமையாக அனைவர் மத்தியிலும் பரவி வருகின்றன. அதன் காரணமாகவே பிரதமர் இன்று அனுராதபுரம் சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டதாக ஒருசாரார் கருத்துக்களை முன் வைத்தது வருகின்றனர்.
அண்மைக்காலமாக இவ்வாறான அறிவித்தல்கள் வருவதும், பின்னர் மீளப் பெறுவதும் மாற்றப்படுவதும் சகஜமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறான நிலையில் எந்த விடயமும் நடைபெற்ற பிறகே இறுதி முடிவாக கருதலாம்.