சஜித் பிரேமதாசவின் கடிதத்துக்கு பதில் கடிதத்தை அனுப்பி வைத்தார் ஜனாதிபதி
பிரதமர் பதவியினை பொறுப்பேற்பதற்கு தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
“தங்களுக்கு முதலில் வழங்கிய வாய்ப்பை மறுத்துவிட்டீர்கள். அதன் காரணமாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளேன். இனி எதனையும் செய்ய முடியாது. தங்களது கட்சி உறுப்பினர்களை பரிந்துரை செய்தால் அமைச்சரவையில் உள்வாங்க பரிசீலனை செய்யலாமென” கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
