ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தீர்ப்பதற்கு, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
கட்சியின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க இந்த முடிவினை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகல காரியவசம் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சி ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுன. அந்த கட்சி ஆதரவு வழங்கினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தை பிரதிநிதிப்படுத்தும் எதிர்க்கட்சிகளும், பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிய சுயாதீன குழுவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தாம் பிரதமருக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என அறிவித்துள்ளன.
