கொழும்பில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் குற்றபுலனாய்வு துறையினரால் இன்று கைது செய்துள்ளனர்.
கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க மற்றும் புத்தளம் மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்மபவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் கீழ், சட்ட மா அதிபர் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக முக்கிய நபர்கள் 22 பேரை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியிருந்தார். பொலிஸ் மா அதிபர் இன்று குற்றப்புலனாய்வு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு குறித்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
அதனடிப்பையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
