வெட்கம்கெட்ட பிரதமர்  – வெளுத்து வாங்கிய சுமந்திரன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக ஆரம்பத்தில் கூறியிருந்தார். பிரதி சபாநாயகர் தெரிவின் போது அரசாங்கத்துக்கு சாதகமாக வாக்களித்திருந்த அதேவேளை, பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனாலும் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் பிரேரித்த ஜனாதிபதி மீதான விருப்பமின்மை  வாக்களிப்பில் பிரதமர் ரணில், ஜனாதிபதிக்கு சார்பாக வாக்களித்திருந்தாரா. இந்த நிலையில் வாக்களிப்பின் பின் உரையாற்றிய சுமந்திரன்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இரட்டை வேடம் தெளிவாக வெளிப்பட்டிருப்பதாகவும், அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் காப்பாற்றுவதாகவும்  குற்றம் சுமத்தியுள்ளார்.

தான் யாரையும் பாதுக்காக்க இந்த பதவிக்கு வரவில்லை என கூறியவர், போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடாத்தபப்டுவதற்கு மூல காரணமாகவிருந்த ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், அவரை பாதுகாப்பதாகவும் கூறியுள்ளார். இந்த செயற்பாடானது இன்றைய தினம் பெயர் பலகையில் பெயர் காட்டப்பட்டு அவரின் உண்மை முகம் நாட்டுக்கே வெளிக்காட்டப்பட்டுள்ளது என பாராளுமன்ற உரையில் சுமந்திரன் கூறினார்.  

“அன்று ஆதரவாக வாக்களிப்பதாகவும் கூறிவிட்டு, இன்று மாறி விளையாட்டு காட்டுகிறார். அன்றும் இன்றும் ஒரேயொரு வித்தியாசம் பதவியினை பெற்றுக் கொண்டுள்ளார். இது மிகவும் வெக்ககேடான செயற்பாடு.  இந்த வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதி பதவியினை இழக்க மாட்டார்என தெரிந்தும் வாக்களித்துவிட்டு தற்போது எதிர்கட்சிகளிடம் ஆதரவு வழங்குமாறு கோருகிறார்.

இருக்கிறாரா, நிற்கிறாரா, நடக்கிறாரா, என்பது கூட அவருக்கே தெரியாது. கொள்கைகள், குறிக்கோள்கள் அற்ற ஒருவர். அவர் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று. பெண் ஒருவரை சபாநாயகராக நியமிக்க கோரிவிட்டு, தனக்கு ஆதரவானவர்களை அதற்கு ஆதரவு கோர முடியவில்லை.    இவரைப் போன்ற ஒருவரை பிரதமராக வைத்திருப்பதற்காக வெக்கப்படவேண்டும்.

நாட்டின் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் ஜானதிபதியே காரணம். அவரே அனைத்துக்கும் பொறுப்பு. நாட்டினை முன்னேற்ற எடுக்கும் சரியான முடிவுகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பபடுமெனவும்” பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவிதத்தார்.

வெட்கம்கெட்ட பிரதமர்  - வெளுத்து வாங்கிய சுமந்திரன்

Social Share

Leave a Reply