ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசா, தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் கலந்து பேசி, தமது ஒப்புதலுடனேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கலந்த காலங்களில், அரசாங்கத்தில் அல்லது ஒரு தேசிய கூட்டணியில் இருந்த, கட்சிகள் நடந்து கொண்ட முறையில் இருந்து மாறுபட்டு பெருந்தன்மையுடனும், அரசியல் நாகரீகத்துடனும், தமிழ் முற்போக்கு கூட்டணி (தமுகூ) இந்த விடயத்தை சமூக நோக்கில் கையாள்கிறது என்பதை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும் எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதொகாவுடன் நடைபெற்ற பேச்சுக்களின் பெறுபேறு பற்றி, தமக்கு சஜித் பிரேமதாச விளக்கி கூறியுள்ளதாகவும், உரிய வேளையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இதில் கலந்துக் கொண்டு கூட்டாக முடிவுகளை எடுக்கும் என மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் தெரிவித்துள்ளார்.
