இன்று(24.05) அதிகாலை 3 மணிமுதல் சகலவித எரிபொருட்களும் விலையேற்றப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய விலைசூத்திரத்திற்க்கான அனுமதி வழங்கப்பட்டதனை தொடர்ந்து இந்த விலையேற்றம் அமுல்செய்யப்பட்டுள்ளது.
92 ரக பெற்றோல் 82 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 420 ரூபாவாக உயர்ந்துள்ளது.
95 ரக பெற்றோல் 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 450 ரூபாவாக உயர்ந்துள்ளது.
ஓட்டோ டீசல் 111 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 400 ரூபாவாக உயர்ந்துள்ளது.
சுப்பர் டீசல் 116 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 445 ரூபாவாக உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக மேலும் பல பொருட்கள் விலையேறும் நிலை ஏற்பட்டுள்ளது.