ஐ . பி .எல் போட்டி தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதின. இதில் ராஜஸ்தான் அணி அபார பந்துவீச்சின் மூலம் வெற்றி பெற்றது. அதிரடியான ஓட்ட குவிப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்ற போதும், இறுதி 2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி மிக அபாரமாக வீசி போட்டியில் 2 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 49(36) ஓட்டங்களையும், மஹிபல் லொம்ரோர் 43(17) ஓட்டங்களையும், எவின் லெவிஸ் 36(21) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் 5(4 – 32) விக்கெட்களையும், மொஹமட் ஷமி 3(4 – 21) விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் மயங் அகர்வால் 67(43) ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 49(33) ஓட்டங்களையும், நிக்கலஸ் பூரான்32(22) ஓட்டங்களையும் பெற்றனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 120 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இலகுவாக வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகள் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு காணப்பட்ட போதும் இறுதி நேரத்தில் ராஜஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு அவர்களுக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தது. குறிப்பாக இறுதி இரண்டு ஓவர்கள் மிக அபாரமாக வீசப்பட்டன. இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் தேவை. கையில் 8 விக்கெட்கள். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியினால் வெல்ல முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நாளை(22.09.2021) டெல்லி கப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ்ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
உதவியுடன் செய்தி தயாரிப்பு
வி .பிரவிக்
தரம் 03