பிரபல வியாபார காந்தம் என போற்றப்படும் தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளர் சாகல காரியவசம், தம்மிக்க பெரேராவினை தமது கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழு, தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.