மக்களுக்கு துரோகம் செய்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது நாட்டின் நலன்களை கருத்திற் கொண்டே தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் நலன்களுக்காக அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
கப்பல் போக்குவரத்து,விமான சேவைகள்,துறைமுகங்கள் மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (11.06) நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மைபயக்காத எந்தவொரு முடிவும் நாட்டுக்கு பயனளிக்காது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் முடிவுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் எடுக்காது எனவும், தன்னால் மேற்கொள்ளப்படும் சகல முடிவுகளும் நாட்டுக்கு கிடைக்கும் நலன்கள் மற்றும் நாட்டுக்கு கிடைக்கும் பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை எனவும் மேலும் தெரிவித்தார்.

மக்களுக்கு துரோகம் செய்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

Social Share

Leave a Reply