இந்திய பிரதமரின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் இந்திய அதானி குழுமத்துக்கு மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் காற்றலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது என கருத்து வெளியிட்டு சர்ச்சைகளை உருவாக்கிய மின்சாரசபையின் தலைவர் M.M.C பெர்டினாண்டோ தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.
மின்சத்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவிடம் அவர் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும், அதனை தான் ஏற்றுக் கொண்டு, உபதலைவர் நலிந்த இலங்ககூனை தலைவர் பதவிக்கு நியமித்துள்ளளதாகவும் அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.