அமெரிக்காவில், ஐக்கிய நாடுகள் கூட்ட தொடர் நடைபெறும் பகுதியில் இலங்கையர்கள் கவனியீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இலங்கையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளில் பதாதைகளை ஏந்திய வண்ணம் இந்த போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர். ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் “நீதி வேண்டும்”, “யார் செய்தது”, “பாதிக்கப்பட்டவர்களுக்கு பதில் என்ன” போன்ற பாதாதைகள் காண்பிக்கபப்ட்டு, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இலங்கை அரசாங்கம் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கான விசாரணைகளை இழுத்தடிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவிலையெனவும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்ததோடு, அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்பு இது தொடர்பான விசாரணைகளை செய்து குற்றவாளிகள் யார் என்பதனை வெளிபப்டுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
வீடியோ உதவி – லக்க்ஷயன்