திருகோணமலையில் முப்படையினர் குவிப்பு.

திருகோணமலையில் பாதுகாப்பு அதிரிக்கப்பட்டுள்ளதோடு, நகரை அண்மித்த பகுதியில் முப்படையினர் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளைய தினம் நாடு பூராகவும் நடைபெறவுள்ள போராட்டங்கள் காரணமாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இதனடிப்படையில் அபயபுர சந்தி, மூன்றாம் கட்டை, தபால் கந்தோர் சந்தி மற்றும் அதிகளவில் மக்கள் நடமாடும் இடங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நாளை (09.06) நடைபெறஉள்ள எதிர்ப்பு பேரணியை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மே 09 ஆம் திகதி நடைபெற்ற கலவரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச திருகோணமலைக்கு பாதுகாப்பு கருதி வருகை தந்திருந்தார். அதே போன்ற நிலையிலேயே அவசரமாக திருகோணமலையில் பாதுகாப்பு பலப்படுத்துவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

திருகோணமலையில் முப்படையினர் குவிப்பு.

Social Share

Leave a Reply