1ம் திகதி நாடு திறக்கப்படும் வாய்ப்புகள்

முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டால் எவ்வாறான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதர திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுளளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணரட்னவிற்கு, நாடு திறக்கப்பட்டதன் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார நடைமுறைகளை தயார் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று 1300-1500 வரையில் குறைந்திருப்தாகவும், இறப்புகள் நூறை விட குறைந்திருப்பதாகவும் குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எதிர்வரும் 1ம் திகதி வரையிலான காலப்பகுதியில் தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை மேலும் குறைவைடைந்தால் மட்டுமே நாடு திறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன என சுகாதர தரப்பு தெரிவித்துள்ளது.

முதலாம் திகதி நாட்டை திறப்பது என்ற முடிவினை அராசாங்கம் இன்னமும் அறிவிக்கவில்லை. அதற்கான தயார் படுத்தல்களையே மேற்கொண்டு வருகிறது. எனவே முதலாம் திகதி முதல் கடும் சுகாதார இறுக்கத்தோடு நாடு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கலாம்.

1ம் திகதி நாடு திறக்கப்படும் வாய்ப்புகள்

Social Share

Leave a Reply