பாரளுமன்றத்துக்கு முன்னரான பொல்துவ சந்தி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் இதுவே 42 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முழு நாளும் நடைபெற்ற போராட்டங்களில் மொத்தமாக 84 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இரவாக பாதுகாப்பு படையினருக்கும், போராட்ட காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. பாராளுமன்றத்துக்குள் போராட்ட காரர்கள் நுழைய முற்பட்ட வேளையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பங்களின் போது இராணுவத்தின் T 56 ரக துப்பாக்கி ஒன்றும், அதற்குள் இடப்பட்டிருந்த 60 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெல்லவாய பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இராணுவ சிப்பாயின் துப்பாகேகியே எடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
