ராஜபக்ஷ சகாக்களுக்கு பயண தடை நாளை வரை நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஆறுபேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்க வேண்டுமென ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஊரடந்கு அமுலாக்கம் காரணமாக தொடர்நதும் வழக்கை விசாரிக்க முடியாமை காரணமாக நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரையில் வழக்கு தாக்கல் செய்யபப்ட்டவர்கள் வெளிநாடு செல்லக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அஜித் நிவாட் கப்ராலுக்கு ஏற்கனவே இரண்டு வழக்குகளில் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடு செல்ல முடியாது என அவரது அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ சகாக்களுக்கு பயண தடை நாளை வரை நீடிப்பு

Social Share

Leave a Reply