S.P.B யின் நினைவுநாள் நிகழ்வு

உலகில் கூடுதலான பாடல்களை பாடி சாதனை படைத்த, கோடி கணக்கான மக்கள் மனஙகளில் வாழும் S.P பாலசுப்ரமணியம் கடந்த வருடம் செப்டெம்பர் 25ம் திகதி கொவிட் தொற்றுக் காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பு பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை ஆழ்ந்த துயருக்குட்படுத்தியிருந்தது.

சென்னை தாமரபாக்கத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திலேயே, அவரது முதலாம் ஆண்டு நிகழ்வும் இன்றைய தினம் நடாத்தப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பங்குபற்றியிருந்த இளையராஜா, தான் S.P.Bயுடன் பயணித்த நாட்கள் மறக்கமுடியாது என்றும், தனது ஒவ்வொரு மேடையிலும் என்றும் S.P.B இருப்பார் எனவும் தெரிவித்ததுடன், S.P.Bயிடம் இறுதி நேரத்தில் யாரைப்பார்க்க வேண்டும் என்று கேட்டபோது தன்னைப் பார்க்க வேண்டும் எனக் கூறியது தமது நட்பு எத்தகையது என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்திருந்தார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய S.P.Bயின் மகனும் பாடகருமாகிய சரண், தந்தைக்காக அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டவுள்ளதாகவும், ஓவியங்கள் வரையவுள்ளதுடன் எதிர்காலத்தில் அருங்காட்சியகம் மற்றும் திரையரங்கு அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை அரச உதவிகள் கோரவில்லை எனவும் தேவைப்படும்போது கேட்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் தனது தந்தையினால் 22 வருடங்களாக நடாத்தப்பட்டு வந்த தெலுங்கு நிகழ்ச்சி உட்பட தந்தையின் பணிகளைத் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இது தவிர தந்தைக்கு செய்யும் பணியாக அவரது பெயருக்கு களங்கம் ஏற்படாது இருப்பதையே பெரிய பணியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

S.P.B யின் நினைவுநாள் நிகழ்வு

Social Share

Leave a Reply