கம்பஹா துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி

கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அழகு கலை நிறுவனம் ஒன்றிலிருந்து வெளியேறிய போது இனம் தெரியாத நபர் ஒருவரினால் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறந்தவர் 22 வயதுடைய இளைஞர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2022 மே மாதம் முதல் இன்று வரை 21 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் இந்த கொலையுடன் சேர்த்து 24 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகளுக்கு திருடப்பட்ட வாகன இலக்க தகடுகள் பாவிக்கப்படுவதாகவும், மக்களை அவதானமாக இருக்குமாறும் பொலிஸாரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply