கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவை தினம் இன்று சென்னையின் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரின் நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த இரு வருடங்களாக கொரோனா வைரஸின் பாதிப்பால் எந்த ஒரு நிகழ்வும் நடாத்தப்படவில்லை. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் தலைமயில் கருணாநிதியின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட கலைஞரின் நினைவு நாள் தி.மு.க. கட்சியால் தமிழக மாநிலம் முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அண்ணா சாலை தொடக்கம் கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணியாக சென்ற முதல்வர் மு.க . ஸ்டாலின் மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அண்ணா சாலையிலுள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த பேரணி காவல் துறையின் பாதுகாப்புடன் ஓமந்துரார் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினா கருணாநிதி நினைவிடம் வரை சென்ற அமைதி பேரணியில் முதலவர் மு.க.ஸ்டாலின் ,தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் ,பொருளாலர் டீ.ஆர்.பாலு , எம்.பி. கனிமொழி ஆகியோருடன் மூத்த அமைச்சர்களான கே.ன்.நேரு ,எ.வ .வேலு ,மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . மலர் மரியாதை செலுத்தியபின் அமைச்சர்களுடன் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் இல்லமான கோபாலபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றார் .
