ஐஸ்லாந் நாட்டில் கடந்த 25ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அல்ரிங்கியின் 63 இடங்களில் 33 இடங்களைப் பெண்கள் கைப்பற்றியுள்ளனர். இது 52வீத வெற்றியைக் குறிப்பதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அந் நாட்டு ஊடகங்களில், கடந்த 2017 தேர்தலை விட இம் முறை பெண்கள் ஒன்பது இடங்களை அதிகமாக கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தேர்தலில் ஜஸ்லாந்தின் பிரதம மந்திரி கத்தரின் ஜாகோப்ஸ்டோடிர் தலைமையிலான, இடதுசாரிக் கூட்டணி பெரும்பான்மையாக இருந்தபோதும், பல இடங்களில் இக்கட்சி ஆசனங்களை இழந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஜாகோப்ஸ்டோடிரின் இடதுசாரிகள் கட்சி பெரும்பான்மை பெற்றால் கன்சிவேட்டிவ் சுதந்திரக் கட்சி மற்றும் அடிப்படைவாத முற்போக்குக் கட்சி என்பன இடதுசாரிக்கட்சியுடன் இணைந்து செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கமைய மற்றயகட்சிகளுடன் இணைந்து ஐஸ்லாந்தில் பெண்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் 21வயதான லென்யா ரன் ரஹா ஹரிம் எனும் பெண்ணும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், ஐஸ்லாந்தின் மிகச்சிறிய வயதில் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் இவரென குறிப்பிடப்பட்டுள்ளது.
