ஆசிரியர் சங்க செயலாளர் பிணையில் விடுதலை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று(08.08) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த மே மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததுடன், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜோசப் ஸ்தாலினுடன் தொலைபேசியில் பேசியிருந்ததாகவும், இன்று திங்கட்கிழமை அவர் பிணையில் விடுதலை செயயப்படுவர் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆசிரியர் சங்க செயலாளர் பிணையில் விடுதலை

Social Share

Leave a Reply