உலக சந்தையில் எரிவாயுவிற்கான விலை, நுகர்வோருக்கு எரிவாயு விற்பனை செய்யப்படும் விலை, என்பவற்றை கருத்தில் கொண்டு எரிவாயுவிற்கான விலை கட்டுப்பாடு கொண்டுவரப்படும் என சந்தை வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பிஸ்கட் ,வயர், இரும்பு ,சீமெந்து போன்ற பல உள்நாட்டு உற்பத்திகளின் விலைகள் அதிகரித்திருப்பதால் அந்த விலைகள் நியாயமானவையா என்பதை ஆராய அவற்றின் விலைச்சூத்திரம் குறித்து நுகர்வோர் அதிகாரசபையில் முன்னிலையாகி அறிக்கை ஒன்றை வழங்குமாறு சம்பத்தப்பட்ட தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.