சமீபகாலமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டிருக்கும்போது கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையும் அதிகரித்தது.
இப்போது முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 70 ரூபா வரை விற்கப்படுகிறது, முட்டை ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை 22 ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.