கண்டியில் பேராதனை நகருக்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து மகாவெலி ஆற்றில் குதித்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் ஆற்றில் குதித்த இடத்திலிருந்து பயணப்பை ஒன்றுடன்,தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை,மடிக்கணினி,இரண்டு வங்கி அட்டைகள், பரீட்சை அனுமதி அட்டை ,பணப்பை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் போன்றவை கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, காணாமல் போன நபர் எஹலியகொட, புலகஹாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
பொலிஸார், கடற்படை உயிர் காப்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்தும் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.