தெரிவு செய்யப்பட்ட துறையினருக்கு எரிபொருள் ஒதுக்கீடு

தெரிவு செய்யப்பட்ட தனியார் மற்றும் அரச துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும்,இந்த வாரம் முதல் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் அறிமுகம் மற்றும் வாகனம் அல்லாத பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு அறிமுகம் எதிர்வரும் வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைய்ச்சர் ட்விட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply