முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மனைவி, அனோமா ராஜ்பக்ஷவிடம் தொலைபேசியில் அச்சுறுத்தல் செய்து 10 இலட்சம் ரூபா பணம் கப்பம் கோரியமை தொடர்பில் கொலன்னாவை பகுதியினை சேர்ந்த 28 வயதான நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி 19 தடவைகளும், 23 ஆம் திகதி 8 தடவைகளுமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் அனோமா ராஜபக்ஷவிற்கு அழைப்பை மேற்கொண்டுள்ளமை தடயவியல் பாதுகாப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தான் கோரிய பணத்தினை வழங்காவிட்டால் அவரது வீட்டுக்கு முன்னாள் மக்கள் ஒன்று கூடுவார்கள் என அச்சுறுத்தியதாக அனோமா ராஜபக்ஷ பொலிஸாருக்கு மேற்கொண்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.