கொள்ளை இலாபம் ஈட்டும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை – ஏறாவூர் நகரசபையில் முடிவு

-அகல்யா டேவிட்-

நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் வாழமுடியாது தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகளும் அதிக இலாபம் பெறுவதை நோக்காகக் கொண்டிருப்பதாக ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் 42வது மாதாந்த சபை அமர்வு அந்த நகர சபையின் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 28.09.2021 இடம்பெற்றது. இந்த சபை அமர்வில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மொத்தமுள்ள 17 தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களில் 16 பேர் சமுகமளித்திருந்தனர்.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து தலைமையுரையாற்றிய நகரசபைத் தலைவர் நழிம் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள்.

ஏறாவூரில் சீமெந்துப் பக்கெற் ஒன்றின் விலை 1300 ரூபாவிலிருந்து 1400 ரூபா வரை விற்கப்படுகின்றது. இந்தவேளையில் நகர சபை நிருவாகம் கட்டுப்பாட்டு விலையை மீறி கொள்ளை இலாபம் அடிக்கும் வர்த்தகர்களை அவதானித்து தக்க நடவடிக்கை எடுக்க மக்களின் ஒத்துழைப்பை நாடுகின்றது.

ஏறாவூரில் மீள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ள தற்காலிகபொதுச் சந்தையில் மீன் மரக்கறி சில்லறைப் பொருள் விற்பனையாளர்களுக்கு குலுக்கல் முறைத் தெரிவில் கடைகள் வழங்கப்படவுள்ளன. மக்களின் சமகால பொருளாதாரக் கஷ்டங்களைக் கருத்திற் கொண்டு விலையை மேலும் அதிகரிக்க அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளை இலாபம் ஈட்டும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை - ஏறாவூர் நகரசபையில் முடிவு

Social Share

Leave a Reply