இங்கிலாந்து அதிரடி. இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடி வெற்றி ஒன்றினை இந்தியா அணிக்கெதிராக பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. அவுஸ்திரேலியா, அடிலயட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் விக்கெட் இழப்புகளின்றி 169 என்ற வெற்றியிலக்கினை துரதியடித்து 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் மிக அபாரமாக இந்தியா அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அதிரடியாக அடித்தாடி வெற்றி பெற்றனர். இந்த உலக கிண்ண தொடரின் சிறந்த வெற்றியாக இந்த வெற்றியினை கணிப்பிடலாம்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்பம் முதல் விக்கெட்களை இழந்த இந்தியா அணி பெரிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றை நோக்கி நகர முடியவில்லை. விராத் கோலி நிதானமாக துடுப்பாடி இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். கோலி, பாண்ட்யாவின் இணைப்பாட்டம் இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை ஓரளவு உயர்த்தி கொடுத்தது. ஹர்டிக் பாண்ட்யா இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.

இந்தப் போட்டிக்காக அழைக்கப்பட்ட க்றிஸ் ஜோர்டான் 03 விக்கெட்களை கைப்பற்றினார்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
ஜோஷ் பட்லர்  804993
அலெக்ஸ் ஹேல்ஸ்  864747
       
       
       
       
       
       
       
       
       
உதிரிகள்  04   
ஓவர்  16விக்கெட்   00மொத்தம்170   

பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
புவனேஷ்வர் குமார்02002500
அர்ஷ்தீப் சிங்  02001500
அக்ஷர் படேல்04003000
மொஹமட் ஷமி03003900
ரவிச்சந்திரன் அஷ்வின்02002700
ஹார்டிக் பாண்ட்யா03003400

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
லோகேஷ் ராஹுல்பிடி – ஜோஷ் பட்லர்கிறிஸ் வோக்ஸ்050510
ரோஹித் ஷர்மாபிடி – சாம் கரண்க்றிஸ் ஜோர்டான்272840
விராட் கோலிபிடி – அடில் ரஷீத்க்றிஸ் ஜோர்டான்504041
சூரியகுமார் யாதவ்பிடி – பில் சோல்ட்அடில் ரஷீத்141011
ஹார்டிக் பாண்ட்யாHit Wicketக்றிஸ் ஜோர்டான்633345
ரிஷாப் பான்ட்Run out 060310
ரவிச்சந்திரன் அஷ்வின்  000000
அக்ஷர் படேல்      
       
       
       
உதிரிகள்  03   
ஓவர்  20விக்கெட்  06மொத்தம்168   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
பென் ஸ்டோக்ஸ்02001800
கிறிஸ் வோக்ஸ்03002401
சாம் கரண்04004200
அடில் ரஷீத்04002001
லியாம் லிவிங்ஸ்டன்03002100
க்றிஸ் ஜோர்டான்04004303

Social Share