அவுஸ்திரேலியா மெல்பேர்னில் நடைபெற்ற ICC T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 06 விக்கெட்களினால் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக சம்பியனாக மகுடம் சூடிக் கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடிப்பாடிய பாகிஸ்தான் 137 அணி ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்திய போதும், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பாகிஸ்தான் அணியினை கட்டுப்படுத்தியது. மத்திய வரிசை விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டமையினால் பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் ஓட்ட எண்ணிக்கை போதாமையினால் இங்கிலாந்து அணி வெற்றியினை பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சாம் கரண், ஆதில் ரஷீட் ஆகியோரின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக அமைந்தது. இதன் காரணமாக ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தி விக்கெட்களையும் இங்கிலாந்து அணியினால் தகர்க்க முடிந்தது.
பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்த போதும், மத்திய வரிசை வீரர்கள் நிதானமாக துடுப்பாடி இங்கிலாந்து அணியினை வெற்றி இலக்கு நோக்கி கொண்டு சென்றனர்.
1992 ஆம் ஆண்டு ஒரு நாள் சர்வதேச உலகக்கிண்ண இறுதிப்போட்டி இதே இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற வேளையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று சம்பியனானது.
பாகிஸ்தான் அணி T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்முறையோடு மூன்றாம் தடவையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. இவற்றுள் 2009 ஆம் ஆண்டு மகுடம் சூடியது.
இங்கிலாந்து அணி மூன்றாம் தடவையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இரண்டாவது தடவையாக சம்பியனாக மகுடம் சூடியது. T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் மட்டுமே இரண்டு தடவைகள் சம்பியனாகியுள்ளது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ஜோஷ் பட்லர் | பிடி- முஹமட் ரிஸ்வான் | ஹரிஸ் ரௌப் | 26 | 17 | 3 | 1 |
அலெக்ஸ் ஹேல்ஸ் | Bowled | ஷயின் ஷா அப்ரிடி | 01 | 02 | 0 | 0 |
பில் சோல்ட் | பிடி- இப்திகர் அஹ்மத் | ஹரிஸ் ரௌப் | 10 | 09 | 2 | 0 |
பென் ஸ்டோக்ஸ் | 52 | 49 | 5 | 1 | ||
ஹரி ப்ரூக் | பிடி- ஷயின் ஷா அப்ரிடி | ஷதாப் கான் | 20 | 23 | 1 | 0 |
மொயின் அலி | Bowled | நசீம் ஷா | 19 | 12 | 3 | 0 |
லியாம் லிவிங்ஸ்டன் | 01 | 02 | 0 | 0 | ||
உதிரிகள் | 04 | |||||
ஓவர் 19 | விக்கெட் 05 | மொத்தம் | 138 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஷயின் ஷா அப்ரிடி | 2.1 | 00 | 13 | 01 |
நசீம் ஷா | 04 | 00 | 30 | 00 |
ஹரிஸ் ரௌப் | 04 | 00 | 23 | 02 |
ஷதாப் கான் | 04 | 00 | 15 | 00 |
மொஹமட் வசிம் | 03 | 00 | 31 | 00 |
இப்திகர் அஹ்மத் | 0.5 | 00 | 13 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
முஹமட் ரிஸ்வான் | Bowled | சாம் கரன் | 15 | 14 | 0 | 1 |
பாபர் அசாம் | பிடி – அடில் ரஷீத் | அடில் ரஷீத் | 32 | 28 | 2 | 0 |
மொஹமட் ஹரிஸ் | பிடி – பென் ஸ்டோக்ஸ் | அடில் ரஷீத் | 08 | 12 | 1 | 0 |
ஷான் மசூட் | பிடி – லியாம் லிவிங்ஸ்டன் | சாம் கரன் | 38 | 28 | 2 | 1 |
இப்திகர் அஹ்மத் | பிடி – ஜோஷ் பட்லர் | பிடி – பென் ஸ்டோக்ஸ் | 00 | 06 | 0 | 0 |
ஷதாப் கான் | பிடி – கிறிஸ் வோக்ஸ் | கிறிஸ் ஜோர்டன் | 20 | 14 | 2 | 0 |
மொஹமட் நவாஸ் | பிடி – லியாம் லிவிங்ஸ்டன் | சாம் கரன் | 05 | 07 | 0 | 0 |
மொஹமட் வசிம் | பிடி – லியாம் லிவிங்ஸ்டன் | கிறிஸ் ஜோர்டன் | 04 | 08 | 0 | 0 |
ஷயின் ஷா அப்ரிடி | 05 | 03 | 1 | 0 | ||
ஹரிஸ் ரௌப் | 01 | 01 | 0 | 0 | ||
நசீம் ஷா | ||||||
உதிரிகள் | 09 | |||||
ஓவர் 20 | விக்கெட் 08 | மொத்தம் | 137 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
பென் ஸ்டோக்ஸ் | 04 | 00 | 32 | 01 |
கிறிஸ் வோக்ஸ் | 03 | 00 | 26 | 00 |
சாம் கரன் | 04 | 00 | 12 | 03 |
அடில் ரஷீத் | 04 | 01 | 22 | 02 |
கிறிஸ் ஜோர்டன் | 04 | 00 | 27 | 01 |
லியாம் லிவிங்ஸ்டன் | 01 | 00 | 16 | 00 |