நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்தவரும் மழைவீழ்ச்சியால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் மழைவீழ்ச்சி காரணமமாக சில பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஹட்டன் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த கண்டி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பிரதேச மக்கள் யாவரையும் அவதானமாக இருக்க கோரியுள்ளதுடன், வாகனப் போக்குவரத்தின் போது அவதானமாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
