காலி மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2021ம் ஆண்டு மஹமோதர வைத்தியசாலையில் 25 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு 36 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் சமூகத்தில் இன்னும் அதிகமாக இருப்பார்கள், எனினும் அவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும், அடையாளம் காணப்படுபவர்களில் அதிகமானோர் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை நாட்டிலிருந்து 427 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், எச்.ஐ.வி தற்போது ஆபத்தான விகிதத்தில் பரவி வருவதாகவும் வைத்தியர் தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.