கரையோர புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத இயந்திரம் ஒன்று தடம் புரண்டதில் கரையோர புகையிரத சேவை களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் முற்றாக முடங்கியுள்ளது.

களுத்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த இந்த புகையிரதம் இயந்திரத்தை மாற்றுவதற்காக மருதானை நோக்கி சென்று கொண்டிருந்த போது களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இதனால் ஏனைய புகையிரத சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது.

காலியிலிருந்து வரும் புகையிரதங்களும் களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கரையோர புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply