வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வானிலை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடல் அலை உயரம் 2.5 – 3 மீட்டர் வரை உயர எழ வாய்ப்பு உள்ளதால்
கடல் சீற்றமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (30) மாலை 6 மணிக்கு மேற்கூறப்பட்டுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்படையினரும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Social Share

Leave a Reply