துப்பாக்கி சூட்டில் பெண் பலி – இராணுவ சிப்பாய்கள் கைது

நேற்றிரவு(13.02) தெமட்டகொடவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது இராணுவ வீரர் ஒருவரின் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து, பொரளை பொலிஸாரினால் இரண்டு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை ஹல்கஹகும்புர பகுதியில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் முற்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த 25 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டில் பெண் பலி - இராணுவ சிப்பாய்கள் கைது
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share