பச்சிளம் குழந்தையை விலைக்கு வாங்க முற்பட்ட பெண் கைது!

வனாதவில்லுவ பிரதேசத்தில் யாசகம் பெறும் பெண்ணின் ஒன்றரை மாத குழந்தையை விலைக்கு வாங்க முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் நேற்று (02) இரவு பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதுடன், குழந்தை கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் தரகர் உட்பட நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் கணவர் வெளிநாட்டில் உள்ளதாகவும், அவர் பிரசவத்திற்காக கொழும்பில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது குழந்தை உயிரிழந்தாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குழந்தை ஒன்றை விலைக்கு வாங்குவதற்காக தன்னிடம் மூன்று இலட்சம் பணம் இருந்ததாகவும், தெமட்டகொடையில் உள்ள அறிமுகமான ஒருவரிடம் தனக்கு குழந்தை ஒன்றை தேடித் தருமாறு பெண் கூறியுள்ளதாகவும் பொலிஸ் மேலும் தெரியவந்துள்ளது.

பம்பலப்பிட்டியில் உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் வழங்கிய தகவலின்படி, குறித்த நபர், பம்பலப்பிட்டி, பொரளை, தெமட்டகொட பகுதியில் சில நாட்களாக இப்பெண்ணுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​யாசகம் பெறும் பெண் ஒருவரை சந்தித்து, அவர் கையில் வைத்திருந்த ஒன்றரை மாத ஆண் குழந்தையை விலைக்கு வாங்க கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதற்கு சம்மதித்த யாசகம் பெறும் பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், தரகருக்கு 50,000 ரூபாவும், முச்சக்கரவண்டி சாரதிக்கு 25,000 ரூபாவும், மேலும் இருவருக்கு தலா 25,000 ரூபாவும் பிரதான சந்தேக நபர் வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாசகம் பெறும் பெண்ணுடன் தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள ஆடையகம் ஒன்றிற்குச் சென்ற சந்தேகநபர், 1900 ரூபாவை செலவு செய்து குழந்தைக்கு ஆடைகளை வாங்கிக் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாசகம் பெறும் பெண்ணிடம் குழந்தையை பெற்றுக்கொள்வதற்க்காக ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், பணம் பெற்றுக் கொண்டதன் பின்னர் குழந்தையை ஒப்படைக்க மறுத்ததையடுத்து, கொம்பனித்தெரு வாகன நிறுத்துமிடத்தில் யாசகப் பெண்ணின் கையிலிருந்து குழந்தையைப் பறித்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது குழந்தை கடத்தப்பட்டதாக யாசகப் பெண் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சிசிடிவி காட்சிகளில் பதிவான முச்சக்கரவண்டியின் பதிவு இலக்கங்களின் அடிப்படையில் நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

பச்சிளம் குழந்தையை விலைக்கு வாங்க முற்பட்ட பெண் கைது!

Social Share

Leave a Reply