SLRC வவுனியா குற்றச்சாட்டு அர்தமற்றது – நகரசபை தலைவர்

வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையின் பொருளாளர் தனபாலசிங்கம் அவர்கள்வெளியிட்டுள்ள அறிக்கை பிழையானது. அர்தமற்றது என வவுனியா நகரசபை தலைவர் கெளதமன் தெரிவித்துள்ளார். நடு நிலையாக செயற்பட வேண்டிய செஞ்சிலைவை சங்கமும் அதன் அங்கத்தவர்களும் இவ்வாறான அறிக்கைகளை விட்டு மக்களை திசை திருப்புவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. “நான் ஒரு போதும் வெளி மாவட்ட உடல்களை தகனம் செய்ய நிதியில்லை” என கூறவில்லை என மேலும் கெளதமன் தெரிவித்துள்ளார். நகரசபையினர நிதி தொடர்பிலும், எமது முகாமைத்துவம் தொடர்பிலும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பொருளாளர் கருத்து வெளியிட்டமை எமது நிர்வாகத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு நகர சபையினால் பல வேலைத்திட்டங்கள் செய்யப்படும் நிலையிலும், கொரோனா மூலம் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு எமது ஊழியர்கள் இரவு பகலாக கடமையாற்றும் நிலையிலும் இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நகரசபை தலைவர் தனது கருத்தை வி மீடியாவுக்கு தெரிவித்தார். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பின்கள் பொறுப்போடு செயற்பட வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் பிழையான தகவல்களை பரப்பக் கூடாது எனவும் நகரசபை தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை பதவி விலகுங்கள். முடிந்தவர்கள் செய்வார்கள் என்பது அச்சுறுத்தும் வகையில் உள்ளது எனவும், இந்த அறிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கெளதமன் கூறியுள்ளார்.

SLRC வவுனியா குற்றச்சாட்டு அர்தமற்றது - நகரசபை தலைவர்

Social Share

Leave a Reply