இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தேர்தலின்றி தெரிவு செய்யவேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருளுக்கு வரிசை, உணவு தட்டுப்பாட்டுக்காக ஆர்ப்பாட்டங்கள், எரிவாயு மற்றும் எரிபொருளுக்கு வரிசைகளில் சண்டை, விவசாய பொருட்கள் இல்லாமல் விவசயிகள் போராடத்தில் ஈடுபட்டனர், இப்படி பல மோசமான நிலைமைகள் காணப்பட்ட வேளையில் ஜனாதிபதியாக ரணில் நாட்டை பொறுப்பெடுத்தார். நாட்டுக்கு பணத்தை கொண்டு வந்தார். சிறிய காலத்துக்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வந்தார். ஆகவே அவரை தேர்தலின்றி நாட்டு மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனவும் வஜிர அபேயவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது. அவ்வாறு போட்டியிட்டாள் அவரை தேசிய சொத்தாக கருதி தெரிவு செய்ய வேண்டும் என மக்களிடம் வஜிர அபேயவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்கவுடன் போட்டியிடுவார்கள் என நம்பப்படும் வேட்பாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தையும், நாட்டையும் வழமைக்கு கொண்டுவருவது தொடர்பில் சிந்திக்ககூட இல்லை என ஜனாதிபதி ரணிலின் நெருக்கமானவரான வஜிர அபேயவர்தன மேலும் கருத்து கூறியுள்ளார்.
