மாகாண சபை தேர்தல்கள் பின்செல்லுமா?

மாகாண சபை தேர்தல்கள் அடுத்த வருட முதல் காலாண்டு பகுதிக்குள் நடாத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் அது பின் செல்லும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே மாகாண சபை தேர்தலை நடாத்த முடியும் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளமையே இதற்கு காரணங்கள் ஆகும்.

புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் மாகாண சபைத் தேர்தலை எந்த முறையிலும் நடத்த முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருப்பதாக, பாராளுமன்ற குழுக்களின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தேர்தல் சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்கு குழுவிடம் கூறியுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குழு கூட்டத்தில் அவர் இதனைதெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயற்பட்டு வரும் மாகாண சபை தேர்தலை நடத்துவது மிக முக்கியமானதாக இருந்தாலும், சட்டச் சூழ்நிலை அதற்கு தடையாக உள்ளது என தெரிவித்த அவர், சட்டங்களை உருவாக்குவது பொது சேவைக்குழுவின் பணியல்ல என்றும் பரிந்துரைகளை வழங்குவதே அதன் பணி என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டங்களை உருவாக்குவது அரசாங்கத்தினதும், பாராளுமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் டினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்கள் பின்செல்லுமா?

Social Share

Leave a Reply