நேற்று(15.04) மேல்மாகாணம் அடங்கலாக பல பகுதிகளில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்திருந்தது.
மழை நேத்தில் கேகாலை, ருவன்வெல்ல பகுதி களனி கங்கையில் நீராடிவிட்டு நடந்து வீடு திரும்பிய குடும்பம் ஒன்று இடி மின்னல் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது. இதில் 12 வயதான சிறுவன் அடங்கலாக மேலும் இரு சிறு பிள்ளைகள் இடி மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 12 வயதான சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாநிலை மாற்றங்கள் இலங்கையில் ஏற்பட்டு வருகின்றன. கடும் வெப்பம் நிலவும் அதேவேளை கடும் மழையும் பெய்கிறது. இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான நிலையில் மக்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சிறு பிள்ளைகளை அவதானமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.