“நாடாளுமன்ற தமிழ் அரங்கம்” என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர், முன்னாள் வடமாகாண சபை முதல்வர் நண்பர் சீ.வீ.விக்னேஸ்வரன் எம்பி தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF/PLOTE), தமிழ் மக்கள் கூட்டணி கட்சிகள் தமது அதிகாரபூர்வ ஆதரவை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கு மேலதிகமாக தெரிவித்துள்ளன எனவும் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
