பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு!

சிங்கள மயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று (25 .04) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஒன்றிணைந்த ஹர்த்தால் செயற்பாட்டிற்கு யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை மாவட்டங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், கடைகள் பூட்டப்பட்டுள்ளதுடன், அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதராததால், பாடசாலைகள் இயங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹர்த்தாளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக, சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், சைவக் கோவில்கள் அழிப்பு , தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும், சங்கானை மற்றும் மானிப்பாய் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வர்த்தகர்கள், மற்றும் தனியார் தொழில் நிலைய ஊழியர்கள் பூரண ஹர்த்தலை முன்னெடுத்துள்ளதால் யாழ் நகரம் முழுமையாக முடங்கியுள்ளது.

Social Share

Leave a Reply