பலாங்கொடை பிரசேதத்தில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!

பலாங்கொடை, கொடகும்புர பிரதேசத்தில் நேற்று (24.04) மின்னல் தாக்கி 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது வீட்டில் இருந்த போதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களின்போது அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கும் சந்தர்ப்பங்களை தயவு செய்து அலட்சியப்படுத்த வேண்டாம். உங்கள் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு என்பதை உணர்ந்து செயற்படுங்கள்.

Social Share

Leave a Reply