ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்

மஞ்சள் ஜப்பானில் மிகவும் பிடித்தமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது. அத்தோடு இது “சுப்பர் உணவு” என்று அழைக்கப்படுகிறது.

ஜப்பானின் ஒகினாவா கிராமத்தில் வாழபவர்கள் உலகின் நீண்ட ஆயுளை கொண்டவர்கள். இதனால் நீண்ட ஆயுளின் சொந்த ஊர் என அழைக்கப்படுகிறது. ஒகினாவா மக்களின் நீண்ட ஆயுளுக்கு மஞ்சள் நுகர்வு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

மஞ்சளில் 3% முதல் 5% குர்குமின் உள்ளது. குர்குமின் என்பது இயற்கையான மற்றும் சக்திவாய்ந்த ஒக்ஸிஜனேற்றியாகும், இது ஒக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆன்டிவைரல், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது.

கூடுதலாக, குர்குமின் இரத்தக் கொழுப்பைக் குறைக்கும், இரத்தச் சர்க்கரையைக் குறைக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அத்தோடு கட்டி, புண் போன்றன ஏற்படாமல் எதிர்ப்பாக செயற்படும். அத்தோடு இவை வேகமாக குணமடையவும் உணவும்.

மஞ்சள் உட்கொள்வது கல்லீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் வயிறு போன்ற உள் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல அதிகமாக மஞ்சளை உணவில் சேர்க்ககூடாது. ஒரு நாளைக்கு 3 கிராம் முதல் 5 கிராம் மஞ்சள் தூள் (1 ஸ்பூன்) உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்

Social Share

Leave a Reply