களுத்துறையில் வெள்ள நிலை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடு!

களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் போக்குவரத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்ள படகுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க கடற்படை தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் அனர்த்த சூழ்நிலை காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இடையூறுகள் ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு மாணவர்களிடம் கேட்டுகொள்ளபட்டுள்ளது.

Social Share

Leave a Reply