உலகக்கிண்ண தெரிவுப் போட்டி – நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் வெற்றி

சிம்பாவேயில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண தகுதிகாண் போட்டி தொடரின் இன்றைய போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும், நெதர்லாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடிப்பாடிய அமெரிக்கா அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்தது 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் க்ஷயன் ஜகங்ஹிர் 71 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ரயான் க்ளெய்ன், பஸ் டீ லீட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 43.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஸ்கொட் எட்வார்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும், ரேஜா நிடமனுடு 58 ஓட்டங்களையும் பெற்றனர். ஜெசி சிங் பந்துவீச்சில் 02 விக்கெட்களை கைப்பற்றினார்.

மேற்கிந்திய தீவுகள், நேபாள அணிகளுக்கிடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடிப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஷாய் ஹோப் 132 ஓட்டங்களையும், நிகலஸ் பூரான் 115 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடிப்பாடிய நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஆரிப் ஷெய்க் 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்களையும், அல்ஸாரி ஜோசெப், கீமோ போல், அகீல் ஹொசைன் ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply