நாடாளுமன்றதின் இறுதி சிறப்பு அமர்வு குறித்து தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் ஜுன் 27 ஆம் திகதி கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஒப்புதலை பெறுவது குறித்து இறுதி அமர்வின்போது விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வார இறுதி அமர்வுகளை நடத்தும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், கட்சித் தலைவர்களால் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கமைய கட்சி தலைவர்கள் கூடி வார இறுதி சிறப்பு அமர்வு குறித்து தீர்மானிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.