இலங்கையர்களுக்கு பல நாடுகளிலிருந்து வேலை வாய்ப்பு!

41 நாடுகளில் இருந்து 12 இலட்சத்திற்கும் அதிகமான வேலை அனுமதிப்பத்திரங்களை இலங்கை பெற்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு திறமைகளையும் மொழித்திறனையும் விருத்தி செய்து இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply