இலங்கை உள்ளிட்ட சுதந்திர நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையிட முயல்வதை ரஷ்யா கண்டித்துள்ளது.
பல்வேறு நாடுகளின் கலாச்சார மற்றும் சமையல் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ரஷ்ய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று நேற்று (23.06) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யன் (Dzhagaryan), செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சில சர்வதேச விவகாரங்களில் இலங்கையின் நடுநிலை தன்மையை பாராட்டினார்.
மேற்கத்திய நாடுகளை தங்கள் சொந்த உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்திய அவர், இறையாண்மை நாடுகளின் விஷயங்களில் தலையிடுவது “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியுள்ளார்.