சாரதி அனுமதி அட்டைகளை உடனடியாக வழங்க முடியாமல் இருப்பதற்கு இயந்திரங்கள் மூலம் பதிப்புகளை போதியளவு செய்ய முடியால் இருப்பதே காரணம் என போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுராதா வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 4000 இற்கும் அதிகமாக அட்டைகளை அச்சிட வேண்டியுள்ளது. அவ்வாறே செய்தாலே தற்காலிக அனுமதி பத்திரம் இன்றி அட்டைகளை அனைவருக்கும் வழங்க வேண்டும். 800,000 அட்டைகள் வழங்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
ஐந்து புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஐந்து இயந்திரங்கள் காணப்படுகின்றன. அவை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியளவு செயற்திறனுடையவயாக இல்லை என நிஷாந்த அனுராதா வீரசிங்க கூறியுள்ளார். தற்போது 4000 அட்டைகள் மட்டுமே ஒரு நாளில் அச்சிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.